Friday, April 15, 2011

சில தர்மங்களும் தீட்டுக்களும்

அகார வாச்சியரான திருமால் வேதவுருவ்னனான கருடனை நோக்கி, கருடா!   நான் உனக்குச் சில தர்மங்களைச் சொல்லுகிறேன் கேள்!
                            கருடா! கிருதாயுகத்தில் மாஹதவம் செய்வது மானிடர்க்கு உத்தமமானது. திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது. துவபாரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது. கலியுகத்தில் தானங்கள் செய்வதே உத்தமமாகும். இல்லறத்தில் இருப்பவனுக்கு எந்த யுகமானாலும் யாகாதி கர்மங்களை செய்வதும் கோயில், குளம், சத்திரம், தோட்டம் முதலியவற்றை உண்டாகி தருமஞ் செய்வதும் அதிதியாராதனம் செய்வதும் உத்தமமான செயல்களாகும். இல்லறத்தில் இருப்பவன், தன் தயாதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரைக் குறித்து தர்ப்பணம் செய்வது அவசியம். இறந்தவன் அந்தப் புனலைப் பெற்று மகிழ்வான். இறந்த தினத்தின் மூன்றாம் நாளில் மூன்று சிறு கற்களைக் கயிற்றில் கட்டி இரவு நேரத்தில் எறிய வேண்டும். சஞ்சயனம் செய்த பிறகு தாயத்தார் அனைவரும் இறந்தவனுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் மூன்று வர்ணத்தாராகிய பிரம, ஷத்திரிய, வைசியருக்குச் சூத்திரன் தர்ப்பணம் செய்யலாம். பிரம, ஷக்திரியருக்கு வைசியன் தர்ப்பணம் செய்யலாம். ஷக்திரியன் பிராமணனுக்குத் தர்ப்பணம் செய்யலாம். பிராமணன் தன் மரபினருக்கள்ளாமல்  மற்ற குலத்தினருக்கு ஒன்றுமே செய்யலாகாது. சூத்திரனுடைய சவத்தோடு பிராமணன் சுடுகாட்டுக்குச் சென்றால் அந்தப் பிராமணனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிராமணன் காவிரி போன்ற புனித நதியில் குளித்துத் தூய்மையாக வேண்டும். மாயந்தவனுக்குக் கர்மம் செய்பவன் யாராயினும் அவன் பஞ்சணையில் படுத்துறங்கக் கூடாது. இறந்தவனுடைய நல்ல குணங்களையே எடுத்துச் சொல்ல வேண்டும். எமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு, அவனைக் குறித்துப் போடப்படும் பிண்டங்கலாலேயே சரீரம் உண்டாகிறது. எனவே பத்து நாட் கிரியைகளையும் தவறாமல் முறைப்படிச் செய்வது அவசியம். பத்துநாள் கருமங்களைச் செய்யாவிட்டால், மாயந்தவன் சரீரம் பெற முடியாமல் வருந்துவான். தனுர் வேதமுணர்ந்த வல்லாளன் ஒருவன், குறி வைத்து அம்பை எய்தால், அந்த அம்பானது குறிதவறாமல் குறித்த இடத்தில் தைப்பது போல, கலைகள் உணர்த்த சற்புத்திரன் மரித்த தன் தாய் தந்தையர்க்குரிய கர்மங்களைச் செய்தால், அக்கரம பயன்கள் அவர்களைத் தவறாமல் சென்றடையும். மரித்த ஜீவன் மூன்றாவது நாள் நீரிலும், மூன்று நாட்கள் அக்கினியிலும், மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிப்பான். முதல் நாளிலும், மூன்றாவது நாளிலும், ஐந்தாவது நாளிலும், ஏழாவது நாளிலும், ஒன்பதாவது நாளிலும், பதினொன்றாம் நாளிலும், நவகிரார்த்தம் செய்ய வேண்டும். முதல் நாளன்று, எந்த இடத்தில் தர்ப்பணம் முதலியவை செய்யப்பட்டனவ, அதே இடத்தில் மற்ற பத்து நாள் கிரியைகளையும் பத்து நாட்களிலும் செய்ய வேண்டும். பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் எந்தக் குலத்தவருக்கு எத்தனை நாட்கள் ஆசௌசம் விதிக்கப்பட்டிருகிறதோ, அத்தனை நாட்களும் பிண்டத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். அது  அவசியமாகும். எந்த திதியில் ஒரு ஜீவன் மரிக்கிறானோ அந்த திதியில் மாசிகம் செய்தலும் அவசியம். பதினொன்றாம் நாள் பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒருவன் அதிக வருத்தப்பட்டு இறந்து விட்டான் என்றால், அவனைக் குறித்து ஏகொதிஷ்ட சிரார்த்தம் சிறப்பாக செய்யப்படுமானால், அவன் வருத்தம் நீங்கி இன்பமடைவான். அந்த ஏகொதிஷ்ட சிரார்த்தத்தை சத்திரியன் பன்னிரெண்டாவது நாளிலும் வைசியன் பதினைந்தாவது நாளிலும் செய்ய வேண்டும். தாய் தந்தை மரித்தாலும் மகவு பிறந்தாலும் சூத்திரக் குலத்தாருக்கு ஒரு மாதம் வரையில் ஆசௌசம் உண்டு.
அரைமாதம் உண்டு என்று சொல்வாரும் உண்டு. சூத்திரன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஏகொதிஷ்ட சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒருவன் இறந்தால், பத்து நாட்கள் தீட்டுடைய அவனுடைய தாயாதிக்காரன் கருமம் முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள்ளாக இறந்த செய்தியை எப்போது கேட்பினும் அத்தாயத்தானுக்கு மூன்று தினம் தீட்டு உண்டு. மூன்று மாதத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள்ளாக கேட்டாலும் ஒரு வருஷத்திற்குள் கேட்டால் ஒரு தினம் மட்டுமே தீட்டு உண்டு. ஒரு வருஷம் முடிந்த பிறகு கேட்டால் கேட்டவுடனேயே ஸ்நானம் மட்டும் செய்தல் போதும். இந்த விதி எல்லா வருணத்தாருக்கும் பொதுவாகும்.
           வைனதேயா!   முன்பே சய்யாதானம் செய்ய வேண்டும் சொல்லியிருக்கிறேன். எந்தப் புருஷனும் அன்னதானத்தைத் தன் கையாலேயே செய்ய வேண்டும். நல்ல மரத்தில் கட்டில் செய்து சொர்ணத்தாலும், வெள்ளியாலும் பூண்கள் போட்டு முத்து மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அந்தக் கட்டிலை அலங்கரித்து பாயில் விரித்துத் தீபம், சந்தானம், புஷ்பம், தாம்பூலம் இவற்றுடன் நறுமணமுடைய மற்ற யாவும் நீருடன் செம்புத்தாலியும் அலங்காரத்திற்கும் லீலார்த்தமாகவும் ஸ்திரி புருஷர்களுக்கு வேண்டியவைகளை பூஜித்து, சிவன் முதலிய தேவர்களும், பார்வதி முதலிய தேவமங்கையரும் லட்சுமிநாரயணரும் இந்தச் சய்யானத்தால் திருப்தியடைய வேண்டும் என்று சொல்லி உபாத்தியாயனுக்குத் தானஞ் செய்து அவனை வலம் வந்து சேவிக்க வேண்டும் என்றருளினார்.

3 comments:

  1. வணக்கம் ஜெகதீஷ்,

    நல்ல அருமையான வலைத்தளம்,
    இதை அனைவரும் நாள்தோறும் படிக்க உங்கள் வலைத்தளத்தில் FEED BUNER என்ற email subscription
    ஐ இணையுங்கள்

    அனைவருக்கும் பயன்படும்..

    ஓய்விருக்கும் போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய http://sivaayasivaa.blogspot.com - விற்கு
    வாருங்கள் .. நன்றி,

    ReplyDelete
    Replies
    1. Not open yr request sent to azhwark@gmail.Com

      Delete
  2. Superb article ! Keep up your good work :)

    ReplyDelete