Thursday, June 30, 2011

ஈமக்கிரியைகள்


கருடன் முராரியை நோக்கி சர்வேசா! தாயைப் பெற்றவளும், அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் பொது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால், அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டம் சேர்க்க வேண்டும்? என்பதை அடியேனுக்குக் கூற வேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பகவான் கூறலானார்.
           வைனதேயா!   தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும். பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான். சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சிலகருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.
                          கருடா!    ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.

Friday, April 15, 2011

சில தர்மங்களும் தீட்டுக்களும்

அகார வாச்சியரான திருமால் வேதவுருவ்னனான கருடனை நோக்கி, கருடா!   நான் உனக்குச் சில தர்மங்களைச் சொல்லுகிறேன் கேள்!
                            கருடா! கிருதாயுகத்தில் மாஹதவம் செய்வது மானிடர்க்கு உத்தமமானது. திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது. துவபாரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது. கலியுகத்தில் தானங்கள் செய்வதே உத்தமமாகும். இல்லறத்தில் இருப்பவனுக்கு எந்த யுகமானாலும் யாகாதி கர்மங்களை செய்வதும் கோயில், குளம், சத்திரம், தோட்டம் முதலியவற்றை உண்டாகி தருமஞ் செய்வதும் அதிதியாராதனம் செய்வதும் உத்தமமான செயல்களாகும். இல்லறத்தில் இருப்பவன், தன் தயாதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரைக் குறித்து தர்ப்பணம் செய்வது அவசியம். இறந்தவன் அந்தப் புனலைப் பெற்று மகிழ்வான். இறந்த தினத்தின் மூன்றாம் நாளில் மூன்று சிறு கற்களைக் கயிற்றில் கட்டி இரவு நேரத்தில் எறிய வேண்டும். சஞ்சயனம் செய்த பிறகு தாயத்தார் அனைவரும் இறந்தவனுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் மூன்று வர்ணத்தாராகிய பிரம, ஷத்திரிய, வைசியருக்குச் சூத்திரன் தர்ப்பணம் செய்யலாம். பிரம, ஷக்திரியருக்கு வைசியன் தர்ப்பணம் செய்யலாம். ஷக்திரியன் பிராமணனுக்குத் தர்ப்பணம் செய்யலாம். பிராமணன் தன் மரபினருக்கள்ளாமல்  மற்ற குலத்தினருக்கு ஒன்றுமே செய்யலாகாது. சூத்திரனுடைய சவத்தோடு பிராமணன் சுடுகாட்டுக்குச் சென்றால் அந்தப் பிராமணனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிராமணன் காவிரி போன்ற புனித நதியில் குளித்துத் தூய்மையாக வேண்டும். மாயந்தவனுக்குக் கர்மம் செய்பவன் யாராயினும் அவன் பஞ்சணையில் படுத்துறங்கக் கூடாது. இறந்தவனுடைய நல்ல குணங்களையே எடுத்துச் சொல்ல வேண்டும். எமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு, அவனைக் குறித்துப் போடப்படும் பிண்டங்கலாலேயே சரீரம் உண்டாகிறது. எனவே பத்து நாட் கிரியைகளையும் தவறாமல் முறைப்படிச் செய்வது அவசியம். பத்துநாள் கருமங்களைச் செய்யாவிட்டால், மாயந்தவன் சரீரம் பெற முடியாமல் வருந்துவான். தனுர் வேதமுணர்ந்த வல்லாளன் ஒருவன், குறி வைத்து அம்பை எய்தால், அந்த அம்பானது குறிதவறாமல் குறித்த இடத்தில் தைப்பது போல, கலைகள் உணர்த்த சற்புத்திரன் மரித்த தன் தாய் தந்தையர்க்குரிய கர்மங்களைச் செய்தால், அக்கரம பயன்கள் அவர்களைத் தவறாமல் சென்றடையும். மரித்த ஜீவன் மூன்றாவது நாள் நீரிலும், மூன்று நாட்கள் அக்கினியிலும், மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிப்பான். முதல் நாளிலும், மூன்றாவது நாளிலும், ஐந்தாவது நாளிலும், ஏழாவது நாளிலும், ஒன்பதாவது நாளிலும், பதினொன்றாம் நாளிலும், நவகிரார்த்தம் செய்ய வேண்டும். முதல் நாளன்று, எந்த இடத்தில் தர்ப்பணம் முதலியவை செய்யப்பட்டனவ, அதே இடத்தில் மற்ற பத்து நாள் கிரியைகளையும் பத்து நாட்களிலும் செய்ய வேண்டும். பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் எந்தக் குலத்தவருக்கு எத்தனை நாட்கள் ஆசௌசம் விதிக்கப்பட்டிருகிறதோ, அத்தனை நாட்களும் பிண்டத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். அது  அவசியமாகும். எந்த திதியில் ஒரு ஜீவன் மரிக்கிறானோ அந்த திதியில் மாசிகம் செய்தலும் அவசியம். பதினொன்றாம் நாள் பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒருவன் அதிக வருத்தப்பட்டு இறந்து விட்டான் என்றால், அவனைக் குறித்து ஏகொதிஷ்ட சிரார்த்தம் சிறப்பாக செய்யப்படுமானால், அவன் வருத்தம் நீங்கி இன்பமடைவான். அந்த ஏகொதிஷ்ட சிரார்த்தத்தை சத்திரியன் பன்னிரெண்டாவது நாளிலும் வைசியன் பதினைந்தாவது நாளிலும் செய்ய வேண்டும். தாய் தந்தை மரித்தாலும் மகவு பிறந்தாலும் சூத்திரக் குலத்தாருக்கு ஒரு மாதம் வரையில் ஆசௌசம் உண்டு.
அரைமாதம் உண்டு என்று சொல்வாரும் உண்டு. சூத்திரன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஏகொதிஷ்ட சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒருவன் இறந்தால், பத்து நாட்கள் தீட்டுடைய அவனுடைய தாயாதிக்காரன் கருமம் முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள்ளாக இறந்த செய்தியை எப்போது கேட்பினும் அத்தாயத்தானுக்கு மூன்று தினம் தீட்டு உண்டு. மூன்று மாதத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள்ளாக கேட்டாலும் ஒரு வருஷத்திற்குள் கேட்டால் ஒரு தினம் மட்டுமே தீட்டு உண்டு. ஒரு வருஷம் முடிந்த பிறகு கேட்டால் கேட்டவுடனேயே ஸ்நானம் மட்டும் செய்தல் போதும். இந்த விதி எல்லா வருணத்தாருக்கும் பொதுவாகும்.
           வைனதேயா!   முன்பே சய்யாதானம் செய்ய வேண்டும் சொல்லியிருக்கிறேன். எந்தப் புருஷனும் அன்னதானத்தைத் தன் கையாலேயே செய்ய வேண்டும். நல்ல மரத்தில் கட்டில் செய்து சொர்ணத்தாலும், வெள்ளியாலும் பூண்கள் போட்டு முத்து மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அந்தக் கட்டிலை அலங்கரித்து பாயில் விரித்துத் தீபம், சந்தானம், புஷ்பம், தாம்பூலம் இவற்றுடன் நறுமணமுடைய மற்ற யாவும் நீருடன் செம்புத்தாலியும் அலங்காரத்திற்கும் லீலார்த்தமாகவும் ஸ்திரி புருஷர்களுக்கு வேண்டியவைகளை பூஜித்து, சிவன் முதலிய தேவர்களும், பார்வதி முதலிய தேவமங்கையரும் லட்சுமிநாரயணரும் இந்தச் சய்யானத்தால் திருப்தியடைய வேண்டும் என்று சொல்லி உபாத்தியாயனுக்குத் தானஞ் செய்து அவனை வலம் வந்து சேவிக்க வேண்டும் என்றருளினார்.

Thursday, March 17, 2011

யமன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாவ அவஸ்த்தைகள்

கருடன் சிறிது யோசித்து மணிவண்ணப் பெருமானைத் தொழுது, யமபுரி எங்குள்ளது? அங்கு செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாக கூற வேண்டும் என்று பிரார்த்தித்தார். திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
    மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. யமபுரிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் வரை செம்பை உருக்கி வார்த்தது போல் கனல் கரந்திக் கொண்டிருக்கும். அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும். சிறிது தூரம் பொறுக்க முடியாத குளிர்ப்பிரதேசம் அமைந்திருக்கும். பூலோகத்திற்கும் எமலோகத்திற்க்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது என்று முன்னமே உனக்குச் சொல்லி இருக்கிறேன். அத்தனை காதவழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்திநிழலும் பருகுவதர்க்குத் தண்ணீரும் சிறிதளவு கூடக் கிடைக்காது. பாபிகளும் யமலோகமும் அங்குச் செல்லம் மார்க்கமும் மிகவும் கொடுமையாக இருக்கும். 
         கருடா!  இனி யம லோகத்தின் தனமையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நாடு மையத்தில் யமபுரியானது வஜ்ஜுர மயமாயும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருதரத்தாலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும். அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிர்க் கொடிகள், முத்துக் கோவைகள், தூரங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும். அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும். அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புகழும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள். ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும். அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான். அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீலமுள்ளதாகவும் பத்து யோசனை உயரமுள்ளதாகவும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது. அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டப்பத்தில் சித்திர குப்தன் வீற்றிருப்பான். அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாவபுண்ணியங்களை ஒன்று விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான். அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது. அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக் கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்.
                                              கருடா! யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ் செய்த சேதனர்கள் யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள். சிலஜீவர்களை உலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள். சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்து பெருந்தலனில் வாட்டுகிறார்கள். இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள். வைனதேயா!   அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும் அக்கினியில்  சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக்  கொண்டிருக்கினறன. பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, பாவிகளே! தருமமும் மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில் இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப் பயன் இதுவேதான்! என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள். பரபுருஷோடு சேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்று சேர்ப்பார்கள். வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர பரஸ்திரியை கூடிக் கலந்ததிற்க்கும் ஸ்திரியானவள் தனது கணவரையன்றி பரபுருஷனைக் கூடியதற்கும் யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்!   இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்திரி புருஷர்களில்  நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில் காண்பதற்கே அரிதாகி விடுகிறது. யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளி அடியாளம் வரையிலும் அழுத்துகிறார்கள். கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே!    என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள். பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன் அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம். தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம். ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதே வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது. 
                               

Friday, February 25, 2011

உடலியல் பற்றிய விளக்கங்கள் 2

வைனதேயா!  பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்)

தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன.

பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.

இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.

சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.

இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும். ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊத்தி விருத்தி செய்கிறது. சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்ப்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.

அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்க்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள். திரிகொனத்தை மேருகிரியென்றும்,  கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.

                                                                              சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றி நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர். மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன். ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போதுதானே அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வவளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான். ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதர்காகவாது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன. ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால் அதையும் கேட்கலாம் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்

Monday, February 21, 2011

மாத விலக்கு , தாம்பத்திய உறவு, கருவளர்ச்சி, உடலியல் பற்றிய விளக்கங்களும் தேவேந்திரன் மயங்கிய கதையும் 1

கருடன் பரமபத நாதனைத் தொழுது சர்வலோக சரண்யரே, மனிதனின் உடலில் தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தலை, கைகள், கால்கள், நாக்கு, நாசி, இரகசிய உறுப்பு, நகம், ரோமம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு, இந்திரஜாலம் போலத் தோன்றுகிறதே! இந்த சரீரம் எங்கனம் உண்டாகிறது? அதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
   பரந்தாமன் கருடனை நோக்கிக் கூறலானார்: மாத விலக்கான பெண்கள், நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பேயிருக்க வேண்டும். அதன் விளக்கம் இந்திரன் தன் அரியணையில் அமர்ந்து அரம்பையர்கள் ஆடிய ஆட்டத்திலும், கந்தர்வர்கள் இசைத்த கரனத்திலும் மதிமயங்கியிருந்தான். அந்த சமயத்தில் தேவ குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். தன் ஆசிரியன் வந்ததையும் கவனியாமல், மரியாதையையும் செலுத்தாமல் மங்கையர் மயக்கத்திலிருந்தான். ஆசிரியநுத் தன்னை, ஆயிரங் கண்ணால் வரவேற்று கௌரவிக்காமல் இருந்ததைக் கண்டு மனம் புழுங்கி அங்கிருந்து வெளியேறினார்.
    ஆசிரியனை மதியாததால், இந்திரனின் செல்வ வளங்கள் சிதைந்தன. அதை அறிந்த இந்திரன் திகைத்தான். ஆசிரியனைத் தேடிச் சென்றான். அவர் இருப்பிடத்திலும் பிற இடங்களிலும் காண முடியாததால் குழம்பிய உள்ளத்தோடு, நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவரிடம் முறையிட்டான்.
நான்முகன் சிந்தித்தான். குல குருவை இழந்தால் தீவினை கொழுந்து விட்டு வளர்ந்துள்ளது. இந்திரனை நோக்கி இந்திரா!   நீ செய்த பிழை பிழையே தான்!. உன் ஆசிரியன் அளித்த தண்டனையும் சரியானது தான். ஆகையால் உன் ஆசான் வருமளவும் இடைக்கால ஆசான் வேண்டும். தானவனான துவஷ்டா என்று ஒருவனிருக்கிறான். அவன் மகன் விச்சுவவிருவன் என்று ஒருவனிருக்கிறான். அவன் முத்தலையன், சீரிய ஒழுக்கமுடையவன் அறிவிற் சிறந்தவன். அவனையே உனது குருவாக் கொள்வாயாக! என்று கூறினார்.
              பிரம தேவன் கூறிய படி வச்சுவவுருவனைத் தன் ஆசிரியனாகக் கொண்டான். இந்திரன் வேள்வியோன்று செய்ய விரும்பி புதிய ஆசானிடம் புகன்றான். வேள்வி துவங்கியது. வஞ்சகனான தானவன், அந்த வேள்வியில் தன் குலத்தைச் சேர்ந்த தானவர்களுக்கு ஆக்கங் கூறி, மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான். புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங் கொண்டு தன் குருவாகிய வச்சுவவுருவனைத் தன் வஜ்ராயுதத்தால் அவனை வெட்டினான். அவனது மூன்று தலைகளும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான். ஆனால், அவனுடைய தவ வலிமையினால் சோமபானஞ் செய்யும் அவன் தலையில் ஒன்று காடையாயிற்று. சுரர் பானஞ்  செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று. அன்னபானஞ் செய்யும் தலை கிச்சிலிப் பறவை ஆயிற்று.
                        விசுவவுருவன் தானவனாயினும் அவன் குருவானபடியால் அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்கள் தங்கள் தலைவனை பீடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள். அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி இந்திரனைப் பிடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களை நோக்கி, இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி என்று கேட்டார்கள்.அதற்குத் தேவர்கள் நீரிலே தோஷம் நுரையாகக் கழியும். மண்ணிலே உவராகக் கழியும், பெண்களுக்கு பூப்பாகக் கழியும் என்றார்கள். அதற்க்கு அவர்கள் மூவரும் பழி சுமக்கும் எங்களுக்குப் பயனேதும் உண்டா? என்றார்கள். அதற்க்கு தேவர்கள், பெண்கள் கருவுயிர்க்கும் வரையில் கணவரை மருவிக் கழிக்கலாம். மண்ணகழ்ந்த குழி தானே நிறையும்! நீர் இறைக்க இறைக்க தானே சுரக்கும்! மரம் வெட்ட வெட்டத் துளிக்கும்! என்றார்கள்.
                         இவ்வாறு இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி பாவம், மங்கையர் முதலானவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்றுக் கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான ( மாத விலக்கான) ஸ்திரியை நான்கு நாட்கள் வரை பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும். பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரியை போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரம ஹத்தி செய்தவனை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பவனைப் போலாலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாக சுத்தியை அடைவாள். பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தாள் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும். நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான். பயிஷ்டையான நான்கு திசைகளுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.
                                                                     அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும். கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பேருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது. மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும். எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.

Wednesday, February 16, 2011

தானச் சிறப்பும் உயிர் பிரியும் விதமும்

ஸ்ரீ மந் நாராயணர், கருடனை நோக்கி, வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது சதுர்த்தியிலாவது, பௌர்ணமியலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். பிரமால்யத்திலும், தேவாலயத்திலும் வடக்கு கிழக்கு முகத்தில் தீபம் வைக்க வேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டேறியச் செய்து கொடுக்க வேண்டும்.
         மனிதனாக பிறந்த ஒருவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன் தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். ஆசனப் பலகையையும் செப்புத் தாலியையும் பொருள்களையும் தானம் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாக எமலோகம் செல்வான். அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும் குடையும், விசிறியும், பாத ரஷயையும் அவசியமாக தானம் செய்ய வேண்டும். வெற்றிலை, பக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானம் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள். ஆடைகளைத் தானம் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறை போன்ற கடைவாய்ப் பற்களும், செம்பட்டை ரோமமும், அச்சம் தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள் என்றருளிச் செய்தார்.
                   கருடன் அவரை நோக்கி, ஸ்ரீ ஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கேட்க பகவான் கூறலானார்.
                    கருடா! உயிரானது மனிதனது சரீரத்தை விட்டு விலகும் பொது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமக்கால்கள் துவாரங்கள் வழியாகவோ, நீங்கி விடும். பாபிகளுக்கு அபானமார்க்கமாக உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டைப் போல கிடக்கும். பிறகு அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல்கூறுகள் பஞ்சபூதத்தால் ஆனவை. ஆகையால் ப்ரித்வி மண்ணிலும், அப்பு புனலிலும், தேயும் அக்கினியிலும், வாயு காற்றிலும் ஆகாயத்திலும் லயமாகி விடும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், காமேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து, ஒன்றோடொன்று உறைந்து இருப்பான். உயிரானது நீங்கும் பொது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடிஎருவதைப் போலவே புண்ணியஞ் செய்த ஜீவன், தன வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஆய்ந்தும் அமைந்த ஒரு திவ்விய தேசத்தில் அவன் குடியேறுவான். மலமூத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும் ஊனும் ஊனும் நரம்பும் எழும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும். ஒ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி, மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தினை சொல்கிறேன் கேட்பாயாக!
                       பல நரம்புகளோடு துணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக்குரோத லோப மோக மதமார் சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம குரோத இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள் என்று கூறியருளினார். 

Thursday, January 27, 2011

பலவகை தானங்கள்

திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். கருடா, தானங்களைச் செய்யும் முறைகளையும் அத்தானங்களளால் ஏற்ப்படும் பயன்களையும் கூறுகிறேன் கேள்.
தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரைப் பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூனூலுக்குப் பருத்தியே ஏதுவானது. சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தித் தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரம ருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடயவனாய், மகாபலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ  நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.
ஒ வைனதேயா! எந்த மனிதனும்தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான கருமங்களைச் செய்து கொள்வது நல்லது. எல்லையும் இரும்பையும் தானம் செய்தால் யமதர்மன் மகிழ்சியடைவான். பருத்தித் தானத்தை செய்தால் யம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களைத் தானம் செய்தால் கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள். மரணமடையும் நிலைமை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தை அடைவான். கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தைதாய் இறக்கும் சமயத்தில் அவன் தன தாய்தந்தை அருகிலேயே இருந்து தொண்டு செய்வதே உத்தமமாகும். கூடாரமும் முசலமும் சூரிகையும் இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாம். அந்த ஆயுதங்கள் இரும்பாலானததால்  மரிக்கும் காலத்தில் இரும்பைத் தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டாமிருகன், ஔதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி யடைவார்கள்.
      வைனதேயா!  ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுள்ள உறுப்புகளில் பிரம்மருத்திர இந்திரராதி தேவர்களும் ஸ்ரீ கிருஷ்ணா பகவானும் இருக்கிறார்கள். தாயும் தந்தையும் குருவும் சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணுவேயின்றி மற்றோருவருமில்லை. சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற அருள்வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன், நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர இந்திரராதி தேவர்கள் ஒன்றைக் கொடுப்பவனும் வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயின்றி வேறொன்றுமில்லை. ஜீவர்கள் பூர்வத்தில் செய்த தர்மத்தை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியம் செய்தவன் சுவர்க்கம் அடைவான். பாவம் செய்தவன் நரகத்தை அடைவான்.