Thursday, November 25, 2010

சபிண்டிகரணமும் கதிபதிகளும்

பகவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடவன் யார் என்பதைக் கூறிய பிறகு கருடன் அச்சுத பிரானைத் தொழுது வணங்கி ஒ சர்வ ஜெகன்னாதா! இறந்தவனைக் குறித்து சபிண்டிகரணம் செய்வதனால் இறந்தவன் அடையும் பலன் என்ன? அதை செய்யாவிட்டால் அவன் எந்தக் கதியை அடைவான்? எப்போதோ மரித்தவனுக்கும் அண்மையில் மரித்தவனுக்கும் பிண்டம் ஒன்று சேர்ப்பது எவ்விதம்? ஒன்று சேர்த்தால் அவர்கள் எக்கதியடைவார்கள்? அகமுடையான் உயிரோடு இருந்து அகமுடையாள் இறந்தால் அவளுக்குச் சபிண்டிகரணம் செய்வது எப்படி? இவற்றையெல்லாம் உலக நன்மையைக் கருதி அடியேனுக்குக் கூறியருள வேண்டும் என்று வேண்டினார். அதற்க்கு ஸ்ரீ கேசவபிரான் கருடனை நோக்கி கூறலானார்.
               ஒ விநுதையின் மகனே! உலக வாழ்வைவிட்டு உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படி செய்து சபிண்டிகரனமும் செய்து அவன் குடும்பத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால், இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்தவன் இறந்த பன்னிரெண்டாம் நாளிலும் மூன்றாவது பக்ஷிதிலும் ஆறாவது மாதத்திலும் சபிண்டிகரணம் செய்யலாம். தந்தை இறக்க, அவன் புத்திரன் தந்தைக்குரிய கருமங்கள் எல்லாவற்றையுஞ் செய்து சபிண்டிகரணம் மட்டுமே செய்யாமல் நிறுத்தி வைதிருக்குஞ் சமயத்தில் கர்மஞ் செய்த புத்திரனுக்கு கல்யாணஞ் செய்ய நேரிட்டால் உடனடியாகச் சபிண்டிகரனத்தைச் செய்த பிறகுதான், மணவினையைச் செய்தல் வேண்டும். சபிண்டிகரணம் செய்யும் வரையிலும் மாயந்தவன் பிரேதத்துவதுடனே இருப்பான். ஆகையால் கருமஞ் செய்தவனுக்கு சிறிது அசுத்த தோஷம் இருக்கும். ஆகையால் அவன் சுபகாரியங்களில் ஒன்றைக் கூட செய்யலாகாது. சந்நியாசிகளுக்குக் கூட பிக்ஷையிடல் கூடாது. பிண்டம் சேர்த்த பிறகு, இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதிர்த்துவம் பெற்று மகிழ்வான். ஆதலாலும், தேகம் அநித்திய மாதலாலும்,   கிருத கிருத்தியம் பலவிதமாதலாலும், பன்னிரெண்டாம் நாளிலேயே சபிண்டிகரணம் செய்வது மிகவும் உத்தமமாகும். ஔபாசணம் செய்வதற்கு, விக்கினும் நேரிட்டாளுங்க்கூடப் பன்னிரெண்டாம் நாளில் சபிண்டிகரணம் செய்யலாம். சபிண்டிகரணம் செய்த பிறகு தாய்தந்தையர் குலத்தில் மூன்று தலைமுறையில் உள்ளவருக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டும். சோடசம் சபிண்டிகரணம் முதலியவற்றைச் செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்களோடு சேர்ந்து மகிழ்ந்து இன்பமடைவான்.
                                                              பெண்ணைப் பெற்றவன் பொருள் சிறிதும் வாங்காமல், அந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்திருந்தால், பின்பு அவன் இறந்ததால் அவளுடைய அகமுடையான் கோத்திரத்தைச் சொல்லி, சமஸ்கிரியைகளையுஞ் செய்தல் வேண்டும். இறைச்சியை விற்பவனைப் போலப் பெண்ணைப் பெற்றவன் , விலைப்பெற்று பெண்ணைக் கொடுத்திருந்தால், அவன் மாண்டுபோனால் அவளுக்கு அவளுடைய பிதாவின் கோத்திரத்தைச் சொல்லிக் கிரியைகளைச் செய்ய வேண்டும். பிதாவுக்கு புத்திரன் மட்டுமே கர்மம் செய்தல் வேண்டும். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜெஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும், மாயந்தவனுடைய சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டு, தனித்தனியாக வாழ்வாராயின் அவனுடைய அகமுடையாள் கர்மம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு புத்திரரும், மனைவியும் இல்லாவிட்டால், மரித்தவனுடைய தாயாதி செய்ய வேண்டும். தாயாதியும் இல்லாவிட்டால் அவனுக்கு மாணாக்கன் இருந்தால் அவன் கர்மம் செய்ய வேண்டும். மேற்சொன்னவர்களில் ஒருவருமே இல்லாவிட்டால், புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களை செய்யலாம். நாலைந்து பேர் சகோதரர்கள் இருந்து அச்சகொதரர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரன் இருந்தால், மற்ற சகோதரர்களும் புத்திரன் உடையவறேயாவர் அவ்விதமாகவே ஒருவருக்கு நாலைந்து மனைவியர் இருந்து அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத்திரன் இருந்தால் மற்ற மனைவியரும் புத்திரனுடயவறேயாவர். புத்திரன் பூணூல் அணிவதற்கு முன்னமே தந்தை இறந்தால் அந்தப் புத்திரனே கர்மம் செய்ய வேண்டும். புத்திரனைப் பெறாதவள் இறந்தால், அவளுக்கு அவளுடைய கணவனே கருமஞ் செய்ய வேண்டும். இறந்தவனுக்காக சபிண்டிகரணம் செய்த பிறகு தெரியாமையினாலாவது பிதுர்த் தேவர்கள் அனைவரையும் குறித்தல்லாமல் இறந்தவனை மட்டுமே குறித்துச் சிரார்த்தம் செய்தால், இறந்தவனும் சிரார்த்தம் செய்பவனும், சிரார்த்ததைச் செய்விக்கின்ற புரோகிதனும்  நரகம் அடைவார்கள்.
                 இறந்தவனுக்குப் பலர் இருந்தாலும் ஓராண்டு வரையிலும் ஒருவனே கிரியைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். வருஷம் முடியும் வரை, நித்திய சிரார்த்ததொடு ஒரு குடத்தில் புனல் நிறைத்து உதககும்ப தானத்தை செய்தல் வேண்டும். கர்மனகளைத் தவறாமல் செய்தால், இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகம் அடைவான். பாட்டன் உயிரோடு இருக்கும் பொது தகப்பன் இறந்தால் அவனக்கு சபிண்டிகரணம் செய்யலாகாது. பாட்டன்  இறந்த பிறகு அந்தப் பாட்டனுக்கு சபிண்டிகரணம் செய்து, பின்பு இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டும். பிதாவும் பிதாவைப் பெற்ற பாட்டியும் உயிரோடு இருக்கும் போது, தாயார் இறந்தால், அவளுக்கும் சபிண்டிகரணம் செய்யலாகாது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களுக்குச் சபிண்டிகரனஞ் செய்த பிறகுதான் தாய்க்குச் செய்ய வேண்டும்.பிறனுக்கு உடன்பட்டு, அவள் ஏவலால் தன் கணவனை இழந்து, பிறந்த குலத்துக்கும் தோஷம் உண்டாக்கும் பெண் பெயானவள் என்றுமே மீலாத நரகத்தை அடைவாள். கணவன் நல்லவனாயினும், கேட்டவனாயினும், அறிஞனாயினும், அறிவிளியாயினும் அவன் உயிரோடிருக்கும் போதும் அவன் இறந்த பிறகும் கணவனையே தெய்வம் என்று பக்தி செய்து கற்பு ஒழுக்கத்தில் நிலை நிர்ப்பவளே, உத்தமியாவாள். கொண்ட கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்து, தன் இஷ்டமாய் அலைபவள்,,சீசீ! இவளும் ஒரு பெண்ணா? என்று பலராலும் ஏசப்பட்டு மறுஜென்மத்தில் ஒரு பரம துஷ்டனைக் கணவனாக அடைந்து, அவனால் அடுத்தடுத்து கண்டிக்கப்பட்டும் துண்டிக்கப்பட்டும் வருந்தி மிகவும் துன்பமடைவாள்.
              கணவன் தெய்வ வழிபாடு அதீதி ஆராதனை, விரதானுஷ்டம் முதலியவற்றைத் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனுகூலமாக யாவையுஞ் செய்ய வேண்டும். கணவனுக்கு பணி செய்வதே  தர்ம பத்தினியின் தர்மமாகும். இதத் தருமம் எல்லாருக்கும் பொதுவானது. பெண்கள் உத்தமமான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து நல்ல மக்களைப் பெட்ட்ரும், குலவிருத்தி செய்து, தன்னைப் பேட்டர தாய்தந்தைக்கும் மணந்த்தவனுக்கும் புகழைத் தேடி, சுமங்கலியாகவே மரித்து உத்தமலோகத்தை அடைவார்கள். இறந்த பிறகும் துன்பப்படாமல் இன்பமடையும் பொருட்டு பன்னிரெண்டாம் நாள் சாஸ்திர விதிப்படி சபிண்டிகரணம் செய்து ஒரு வருடம் வரையிலும் நித்திய சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

No comments:

Post a Comment