Thursday, September 2, 2010

மூன்று ஆசைகள் கொண்ட சிறந்த பிறவிகள்

ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கி கூறலானார்:

பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன. அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில்  இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன. கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள்.  மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான். இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழவும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள். ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து  கிழப் பிணமே!  வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட! என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக் கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.

                                          கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான். உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான். அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும். இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்

2 comments:

  1. மிகவும் சிறப்பான பகுதி..
    //பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும்//
    உண்மை..இந்த மனிதப் பிறவியில்தான் இறைவனை அறிய முடியும்..துதிக்க முடியும்..

    Plz give space between paragraphs..

    ReplyDelete
  2. நமஸ்காரம்,
    தங்கள் படைப்புகளை இங்கும் பகிரவும்.
    http://www.archakarkural.forumta.net

    ReplyDelete