Sunday, December 19, 2010

எள் , தருப்பை முதலியன பற்றி

கருடன், திருமாலைப் பணித்து, சர்வேசா! தாங்கள் இதுவரை கூறிய விசயங்களை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கருமங்களைச் செய்யும் போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தை கொமயத்தால் ஏன் மெழுக வேண்டும். பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எண்ணெய்யும், தர்ப்பைப் புற்களையும் உபயோகைப்பதேன்?கட்டிலில் படுதுரங்கியபடியே இறந்தவர்கள் நற்க்கதியடைய மாட்டார்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களை யெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். உடனே புருஷோத்தமன் கருடனை நோக்கிக் கூறலானார்:
வைனதேயா! நல்ல கேள்வி! சொல்கிறேன். நீயும் கவனமாக கேட்ப்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பமில்லை. தர்மமும் தவமும் செய்யவில்லை என்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும். கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது. நன்மைகனைப் பெற்றவனே எல்லா உலகங்களிலும் நன்மையை அடிவான்.

கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே ஒரு குறிப்பிட்ட ஸ்த்தலத்தில் திருவலக்கால் துடைத்து சுத்தம் செய்து, கோமியத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் செய்தால், அரக்கரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும், அங்கு செய்யவிடாமல் அக்கர்மங்களை முற்றுப்பெறாதவாரும் தடுத்து நிறுத்தி விடும். சுத்தம் செய்த ஸ்த்தலத்தில் கருமம் செய்தால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். தூய்மை செய்யாதிடத்தில் கர்மம் செய்தால் பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.
       எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இருவகைப்படும். கருப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புள், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று. அந்தத் தருப்பையின் இருகடையிலும் பிரமனும் சிவனும் அதன் நடுவே ஸ்ரீ ஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் எதுவும் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்க்கும் தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாயக்கும்  (துளசி)  நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.
                ஏகாதசி விரதமும், திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும், பசுவும் பிராமண சக்தியும், ஸ்ரீ ஹரியின் சரனுமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தை கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்த்தலத்தில் சூசைப் புல்லை பரப்பி அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புள்ளனையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் துளசியையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயார புகன்ற வண்ணம் மடிவாநாகில், அயனரனாதியருக்கும் அரிதாகிய நிரதிசிய இன்பவீடாகிய நமது உலகத்தை வந்தடைவான். மாய்ப்பவன் தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுத்தலாகாது. முதுகு கீழறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதி தாங்களைஎல்லாம் கொடுத்து விட வேண்டும். அவற்றில் உப்பை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்க்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்கலோகத்தை அடைவான் என்றார் திருமால்.

Wednesday, December 8, 2010

பக்ருவாகனன் கருமம் செய்தல்


கருடன், பரமபதியை தொழுது பரமபுருஷா! இதற்கு முன்பு பிரேத ஜென்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா?    அத்தகைய சரிதரமிருந்தால், அதைச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டினார்.
            ஸ்ரீமந் நாராயண பகவான், கருடனை நோக்கி கூறலானார்:
 வைன தேயனே! நீ இப்போது கேட்ட கேள்வி நல்லதொரு கேள்வியாகும். இதற்கு ஒரு கதை உள்ளது. கவனமாகக் கேள் என்றார். திரோதாயுகத்தில் பக்ருவாகணன் என்ற அரசன் இருந்தான். அவன் தன நித்தியகர்மங்களை நியமனத் தவறாமல் செய்து வந்தான். பெரியோர்களால் கொண்டாடப்பட்ட அவன் மகோதயம் என்ற நகரத்திலிருந்து உலகத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாட விரும்பி, தன படை வீரர்கள் சிலருடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடினான். அப்போது அவன் பார்வையில் புள்ளிமான் ஒன்று தென்பட்டு, அந்த மான் மீது அம்பெய்தான். அடிப்பட்ட அந்த மான் கீழே விழுந்து எழுந்து ஓடிற்று. மறுபடியும் அம்மான் மீது அம்பெய்தான். அந்த அம்பு குறிதவறாமல் அந்த மான் மீது பாய்ந்தது. அம்பு பாய்ந்த புண்ணிலிருந்து வழிந்து ஒழுகிய ரத்தமானது சிதறியது. அந்த மான் மீண்டும் ஓடி எங்கோ மறைந்தது. அரசன் மானின் உடலிலிருந்து தரையில் விழுந்திருந்த ரத்த சுவட்டைப் பின்பற்றிச் சென்று, நெடுந் தூரம் நடந்து, வேறு ஒரு வனத்தையடைந்தான். அங்கும் அந்த புள்ளிமான் காணாததாலும், வழிநடந்த சோர்வாலும் மிகவும் சோர்வடைந்தான். அரசனுக்குரிய பசியை விடத்தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தண்ணீருக்காக அந்த வனம் முழுவதும் ஒரு தடாகத்தை தேடியலைந்து, ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு அதனுள்ளிறங்கி, நீராடி, புனல் பருகிக் களைப்பு நீங்கினான். அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து, தன்னுடன் வேட்டையாட வந்தவர்களுக்காக காத்திருந்தான். நெடுநேரமாகி அந்திமங்கியது. இருள் கவிந்தது.
                                           
                                     அப்போது எழும்பும் நரம்பும் தசையும் இல்லாத பிரேதம், பல பிரேதங்களோடு பயங்கரமாக கூச்சல் இருப்பதைக் கண்ட அரசன் பயமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான். அந்த பிரேத ஜென்மம், அரசனுடன் நெருங்கி வந்து அரசனே!  உன்னைக் காணப் பெற்றதால் இந்தப் பிரேத ஜென்மம் நீங்கி நற்கதியை அடைவேன் என்று வணக்கமாக கூறியது. அரசன் அந்த பிரேத ஜென்மத்தைப் பார்த்து, நீ யார்? எவ்வாறு பேசுகிறாய்?  உன் வரலாறு என்ன?  அதை விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டான்.
                       

           உடனே அந்தப் பிரேத ஜென்மம், அரசனை நோக்கி, வேந்தனே!   என் சரித்தரத்தை சொல்கிறேன், நீங்கள் கருணையுடன் கேட்க வேண்டும். வைதீசம் என்று ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்திலே இரதகள, துரகபதாதிகள் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த நகரத்தில் தான் நான் வைசிய குலத்தில் பிறந்து வளர்ந்து திருமணஞ் செய்து சுகமாக வாழ்ந்து வந்தேன். என் பெயர் தேவன்!   நான் என் வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, பிரதானுஷ்டானம் செய்து வந்தேன். பெரியோர்களை வணங்கி தேவாலயம் பிரமாலையம் முதலியவற்றை சீர் செய்து புதுப்பித்தேன். ஏழைகளையும் அனாதைகளையும் அகதிகளையும் நாதனற்றவர்களையும் ரட்சித்து, சகல ஜீவர்களுக்கும் என்னால் இயன்ற அளவுக்கு நன்மைகளையே செய்து என் வாழ்நாள் முடிந்து நான் மடிந்தேன். புத்திரன் சுற்றத்தார் யாருமில்லை. அதனால் எனக்கு யாரும் கர்மம் செய்யாததால் நான் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைந்தேன். இந்த பிரத ஜென்மத்தை நான் அடைந்து வெகு காலமாயிற்று. இந்த ஜென்மத்தொடு நான் மிகவும் வருந்துகிறேன். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய சமஸ்க்காரம், சஞ்சயனம், விருஷோர்சர்க்கம், சோடசடம், சபிண்டிகரணம், மாசிகம், சிரார்த்தம் முதலிய சடங்குகளை இறந்தவனின் மகன், அல்லது மற்ற உறவினர்கள் ஒருவருமே செய்யாவிட்டால், இறந்தவன் பிரேத ஜென்மத்தையே அடைவான். உலகத்தை ஆளும் உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ குடிமக்களின் காவலன் உறவினன். ஆகையால், அடியேனுக்கு செய்தற்குரிய கர்மங்களை செய்து, இந்தப் பிரேத ஜென்மத்தை நீக்க வேண்டும்.  என்னிடம் சிறப்பான நவரத்தினங்களில் சிறந்த மாணிக்கம் இருக்கிறது. அதை பாதகாணிக்கையாக ஏற்றுக் கொள்வாயாக என்று பிரேத ஜென்மம் அரசனிடம் கொடுத்தது.
                              
அரசன் அந்த பிரேத ஜென்மத்தை நோக்கி, பிரேதமே! நான் எப்படி கருமஞ் செய்ய வேண்டும்? இது எப்படி நீங்கும்? பிரேத ஜென்மத்தை நீ எவ்வாறு அடைந்தாய்! அவற்றை நீ எனக்கு சொல்ல வேண்டும், என்று அரசன் கேட்டான்.
      அரசே! அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைவான். தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான். தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள். போரில் புறங்காட்டி ஓடியவனும், செய்நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள் என்று கூறியது. பிரேத ஜென்மம் எப்படி நீங்கும்? அத்தகயவனுக்கு அத்தகைய கர்மத்தை செய்ய வேண்டும்? எவ்விதம் செய்ய வேண்டும் என்பதைச் சொல் என்றான். வேந்தனே! இதைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன் கேள்! நாராயனபலி சகிதனாய், ஸ்ரீமான் நாராயனைப் போல திவ்விய மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து, சங்கு சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்காரஞ் செய்து, கிழக்கு திசையில் ஸ்ரீதரனையும், தெற்குத் திக்கில் மஹா சூரனையும்,  மேற்குத் திசையில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் பிரமருத்திரயரோடு ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் நிலைநிறுத்தி, ஆராதனை செய்து, வளம் வந்து வணங்கி, அக்கினியிலே ஹோமஞ் செய்து, மீண்டும் நீராடி விருஷோர்சர்க்கம் செய்து, பதின்மூன்று பிராமணர்களை வருவித்து, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து பிருஷ்டாணன் போஜனம் செய்வித்து, சய்யாதனம், கடகதானம் கொடுத்தால், மரித்தவன் பிரேத ஜென்மத்திலிருந்து நீங்குவான் என்று பிரேதம் கூறியது.
                                          
                                               மன்னனித் தேடிக் கொண்டிருந்த அவனது பரிவாரங்கள் அவன் அமர்ந்திருந்த தடாக கரைக்கு வந்து கொண்டிருந்ததை பிரேதம் பார்த்து மறைந்து விட்டது. இது என்ன விந்தை!   சேனை வீரர்களை கண்டதுமே பிரேத ஜென்மம் மறைந்து விட்டதே! அரசன் தன் சேனைகளோடு தன் நகரத்தை அடைந்தான். பிறகு அந்த பிரேத ஜென்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும் தர்மனகளையும் முறைப்படி செய்தான். உடனே அந்த பிரேதம் தனுக்கு நேரிட்ட ஆவிப் பிறவியை நீங்கி நல்லுலகை அடைந்தது என்று திருமால் கூறினார்.
                                    அதைக் கேட்டதும் கருடன் ஜெகத்காரணனை நோக்கி, இவை தவிர வேறு என்ன கர்மங்களை செய்தால் பிரேத ஜென்மம் நீங்கும்? அதனையும் எனக்கு கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
                        அதற்க்கு ஆழிவண்ணன், கருடா! எண்ணெய் நிறைந்த ஒரு குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தாலும் சகல் பாவங்களும் நசித்துப் பிரேத ஜென்மமும் நீங்கி விடும். மரித்தவன் இன்பமுடன் மீலாவுலகை அடைவான். குடங்களில் பாலும் நெய்யும் நிரம்ப வார்த்து திக்கு பாலகர்களையும் அஜசங்கரரையும் ஸ்ரீஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களை தானம் கொடுப்பது மிகவும் சிறப்புடையதாகும் என்றார்.

Thursday, November 25, 2010

சபிண்டிகரணமும் கதிபதிகளும்

பகவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடவன் யார் என்பதைக் கூறிய பிறகு கருடன் அச்சுத பிரானைத் தொழுது வணங்கி ஒ சர்வ ஜெகன்னாதா! இறந்தவனைக் குறித்து சபிண்டிகரணம் செய்வதனால் இறந்தவன் அடையும் பலன் என்ன? அதை செய்யாவிட்டால் அவன் எந்தக் கதியை அடைவான்? எப்போதோ மரித்தவனுக்கும் அண்மையில் மரித்தவனுக்கும் பிண்டம் ஒன்று சேர்ப்பது எவ்விதம்? ஒன்று சேர்த்தால் அவர்கள் எக்கதியடைவார்கள்? அகமுடையான் உயிரோடு இருந்து அகமுடையாள் இறந்தால் அவளுக்குச் சபிண்டிகரணம் செய்வது எப்படி? இவற்றையெல்லாம் உலக நன்மையைக் கருதி அடியேனுக்குக் கூறியருள வேண்டும் என்று வேண்டினார். அதற்க்கு ஸ்ரீ கேசவபிரான் கருடனை நோக்கி கூறலானார்.
               ஒ விநுதையின் மகனே! உலக வாழ்வைவிட்டு உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படி செய்து சபிண்டிகரனமும் செய்து அவன் குடும்பத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால், இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்தவன் இறந்த பன்னிரெண்டாம் நாளிலும் மூன்றாவது பக்ஷிதிலும் ஆறாவது மாதத்திலும் சபிண்டிகரணம் செய்யலாம். தந்தை இறக்க, அவன் புத்திரன் தந்தைக்குரிய கருமங்கள் எல்லாவற்றையுஞ் செய்து சபிண்டிகரணம் மட்டுமே செய்யாமல் நிறுத்தி வைதிருக்குஞ் சமயத்தில் கர்மஞ் செய்த புத்திரனுக்கு கல்யாணஞ் செய்ய நேரிட்டால் உடனடியாகச் சபிண்டிகரனத்தைச் செய்த பிறகுதான், மணவினையைச் செய்தல் வேண்டும். சபிண்டிகரணம் செய்யும் வரையிலும் மாயந்தவன் பிரேதத்துவதுடனே இருப்பான். ஆகையால் கருமஞ் செய்தவனுக்கு சிறிது அசுத்த தோஷம் இருக்கும். ஆகையால் அவன் சுபகாரியங்களில் ஒன்றைக் கூட செய்யலாகாது. சந்நியாசிகளுக்குக் கூட பிக்ஷையிடல் கூடாது. பிண்டம் சேர்த்த பிறகு, இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதிர்த்துவம் பெற்று மகிழ்வான். ஆதலாலும், தேகம் அநித்திய மாதலாலும்,   கிருத கிருத்தியம் பலவிதமாதலாலும், பன்னிரெண்டாம் நாளிலேயே சபிண்டிகரணம் செய்வது மிகவும் உத்தமமாகும். ஔபாசணம் செய்வதற்கு, விக்கினும் நேரிட்டாளுங்க்கூடப் பன்னிரெண்டாம் நாளில் சபிண்டிகரணம் செய்யலாம். சபிண்டிகரணம் செய்த பிறகு தாய்தந்தையர் குலத்தில் மூன்று தலைமுறையில் உள்ளவருக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டும். சோடசம் சபிண்டிகரணம் முதலியவற்றைச் செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்களோடு சேர்ந்து மகிழ்ந்து இன்பமடைவான்.
                                                              பெண்ணைப் பெற்றவன் பொருள் சிறிதும் வாங்காமல், அந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்திருந்தால், பின்பு அவன் இறந்ததால் அவளுடைய அகமுடையான் கோத்திரத்தைச் சொல்லி, சமஸ்கிரியைகளையுஞ் செய்தல் வேண்டும். இறைச்சியை விற்பவனைப் போலப் பெண்ணைப் பெற்றவன் , விலைப்பெற்று பெண்ணைக் கொடுத்திருந்தால், அவன் மாண்டுபோனால் அவளுக்கு அவளுடைய பிதாவின் கோத்திரத்தைச் சொல்லிக் கிரியைகளைச் செய்ய வேண்டும். பிதாவுக்கு புத்திரன் மட்டுமே கர்மம் செய்தல் வேண்டும். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜெஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும், மாயந்தவனுடைய சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டு, தனித்தனியாக வாழ்வாராயின் அவனுடைய அகமுடையாள் கர்மம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு புத்திரரும், மனைவியும் இல்லாவிட்டால், மரித்தவனுடைய தாயாதி செய்ய வேண்டும். தாயாதியும் இல்லாவிட்டால் அவனுக்கு மாணாக்கன் இருந்தால் அவன் கர்மம் செய்ய வேண்டும். மேற்சொன்னவர்களில் ஒருவருமே இல்லாவிட்டால், புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களை செய்யலாம். நாலைந்து பேர் சகோதரர்கள் இருந்து அச்சகொதரர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரன் இருந்தால், மற்ற சகோதரர்களும் புத்திரன் உடையவறேயாவர் அவ்விதமாகவே ஒருவருக்கு நாலைந்து மனைவியர் இருந்து அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத்திரன் இருந்தால் மற்ற மனைவியரும் புத்திரனுடயவறேயாவர். புத்திரன் பூணூல் அணிவதற்கு முன்னமே தந்தை இறந்தால் அந்தப் புத்திரனே கர்மம் செய்ய வேண்டும். புத்திரனைப் பெறாதவள் இறந்தால், அவளுக்கு அவளுடைய கணவனே கருமஞ் செய்ய வேண்டும். இறந்தவனுக்காக சபிண்டிகரணம் செய்த பிறகு தெரியாமையினாலாவது பிதுர்த் தேவர்கள் அனைவரையும் குறித்தல்லாமல் இறந்தவனை மட்டுமே குறித்துச் சிரார்த்தம் செய்தால், இறந்தவனும் சிரார்த்தம் செய்பவனும், சிரார்த்ததைச் செய்விக்கின்ற புரோகிதனும்  நரகம் அடைவார்கள்.
                 இறந்தவனுக்குப் பலர் இருந்தாலும் ஓராண்டு வரையிலும் ஒருவனே கிரியைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். வருஷம் முடியும் வரை, நித்திய சிரார்த்ததொடு ஒரு குடத்தில் புனல் நிறைத்து உதககும்ப தானத்தை செய்தல் வேண்டும். கர்மனகளைத் தவறாமல் செய்தால், இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகம் அடைவான். பாட்டன் உயிரோடு இருக்கும் பொது தகப்பன் இறந்தால் அவனக்கு சபிண்டிகரணம் செய்யலாகாது. பாட்டன்  இறந்த பிறகு அந்தப் பாட்டனுக்கு சபிண்டிகரணம் செய்து, பின்பு இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டும். பிதாவும் பிதாவைப் பெற்ற பாட்டியும் உயிரோடு இருக்கும் போது, தாயார் இறந்தால், அவளுக்கும் சபிண்டிகரணம் செய்யலாகாது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களுக்குச் சபிண்டிகரனஞ் செய்த பிறகுதான் தாய்க்குச் செய்ய வேண்டும்.பிறனுக்கு உடன்பட்டு, அவள் ஏவலால் தன் கணவனை இழந்து, பிறந்த குலத்துக்கும் தோஷம் உண்டாக்கும் பெண் பெயானவள் என்றுமே மீலாத நரகத்தை அடைவாள். கணவன் நல்லவனாயினும், கேட்டவனாயினும், அறிஞனாயினும், அறிவிளியாயினும் அவன் உயிரோடிருக்கும் போதும் அவன் இறந்த பிறகும் கணவனையே தெய்வம் என்று பக்தி செய்து கற்பு ஒழுக்கத்தில் நிலை நிர்ப்பவளே, உத்தமியாவாள். கொண்ட கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்து, தன் இஷ்டமாய் அலைபவள்,,சீசீ! இவளும் ஒரு பெண்ணா? என்று பலராலும் ஏசப்பட்டு மறுஜென்மத்தில் ஒரு பரம துஷ்டனைக் கணவனாக அடைந்து, அவனால் அடுத்தடுத்து கண்டிக்கப்பட்டும் துண்டிக்கப்பட்டும் வருந்தி மிகவும் துன்பமடைவாள்.
              கணவன் தெய்வ வழிபாடு அதீதி ஆராதனை, விரதானுஷ்டம் முதலியவற்றைத் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனுகூலமாக யாவையுஞ் செய்ய வேண்டும். கணவனுக்கு பணி செய்வதே  தர்ம பத்தினியின் தர்மமாகும். இதத் தருமம் எல்லாருக்கும் பொதுவானது. பெண்கள் உத்தமமான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து நல்ல மக்களைப் பெட்ட்ரும், குலவிருத்தி செய்து, தன்னைப் பேட்டர தாய்தந்தைக்கும் மணந்த்தவனுக்கும் புகழைத் தேடி, சுமங்கலியாகவே மரித்து உத்தமலோகத்தை அடைவார்கள். இறந்த பிறகும் துன்பப்படாமல் இன்பமடையும் பொருட்டு பன்னிரெண்டாம் நாள் சாஸ்திர விதிப்படி சபிண்டிகரணம் செய்து ஒரு வருடம் வரையிலும் நித்திய சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

Saturday, November 6, 2010

புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்

ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயனமூதியானவர் கருடாழ்வானை நோக்கி கூறலானார்.


ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான். கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு  பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும். குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச்  செய்ய வேண்டியதில்லை. மரித்தவன் பாலகனாயினும் இளைஞனாயினும் விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங் குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும். இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும். பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம்  செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும். குடம்,குடை,தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரம் நெல் குத்தும் உலக்கை செய்யப்பட்டு விடும். பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குளத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.
தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான். அதனால்தான் தைதந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும் என்றார் திருமால்.
கருட பகவான், பரமபதியை வணங்கித் தொழுது ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விலக்கியருள வேண்டும் என்று கேட்டார். பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.
          புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திகுமே  புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.
              ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில்  இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான்.  பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன் அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு  அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல் அந்தப் புத்திரன் தன் குலத்து இருபோதொரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையருக்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம். அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவனைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று. அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது.காமக் கிழத்தியின் புத்திரராயினும் அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம். ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புதிரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள். நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும் என்றார் திருமால். 

Friday, October 29, 2010

ஜனன மரண விதிகள்!


 கருட பகவான் ஆதிபகவனைத் தொழுது வணங்கி சர்வேசா!


பூவுலகில் பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்குவகை குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களள்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகை அமைபினரும் இருகிறார்கலல்லவா? அவர்களில் பலர் பலவிதமாகயிருகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருல வேண்டும் என்று வேண்டினான்.
                                                   நெடுமால் கருடனை நோக்கி, நீ கேட்ட கேள்வி சிறந்தது தான். அதற்குரிய விடையைக் கூறுகிறேன் கேள். உயிரினங்கள்  மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதர்க்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான். உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள் அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள். மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைச் செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள். இகவாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் உறுதியான தான நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி செய்து பூஜி யாதவனும், தூய்மையில்லாதவனும் தெய்வபக்தி இல்லாதவனும் யம லோகத்தில் எப்போதும் உழல்வார்கள். பிறருக்குக் கேடு நினைப்பவனும் பொய்யுரைப்போனும், ஜீவன்களிடத்தில் கருணையில்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும் தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து பிறருக்குரிய கர்மங்களை செய்பவனும் யம லோகத்தில் வேதனைப்படுவார்கள்.  புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜெபவேள்விகள் செய்யாத திவசமும், தேவராதனை செய்யாத தினமும், புனிதரான மகான்களையும் உலகிற்கு நல்லவைகளை செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும். சூத்திர மரபில் பிறந்தவன் பிரம குலத்தினரே தெய்வம் என்று நினைத்துப் பக்தி செய்து, அவரிட்ட தொழிலைப் புரிந்து தாசனாய் இருப்பானாகில் அவன் நற்கதியை அடைவான். அவன் வேறொரு கர்மமும் செய்ய வேண்டியதில்லை. அவன் உயர்ந்த ஜாதியருக்குரிய கர்மங்களைச் செய்வானேயாகில் நலிவுருவான்.  
                                   
                                       கருடா! மனிததேகம் என்ன பூவுலகில் சஞ்சரிக்கும். எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாக உள்ளது. சுக்கில சுரோணிதத்தால்(விந்து, நாதம்) உண்டாவது, அன்னபானாதிகாளால் விருத்தியடைவது. காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மாலையில் நசித்து விடும். உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும் குலையும். ஆசையால் சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு நற்கர்மங்களைச் செய்ய வேண்டும். பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்?    அதை வீணாகச் சுமந்து திரிந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா? யாருக்கும் சொந்தமில்லை. ஜீவன் போன பிறகு புழுவாகவும் சாம்பலாகவும் அழியும் உடலானது. ஒருவருடயதும் அல்லவென்று அறிந்தும் ஓர்ந்து, சரீரத்தின் மீது ஆசை வைக்காமல் பகவத் பாகவத ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பாவங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமாக பாவங்களைச் செய்தவன் நாய், நரி முதலிய இழிந்த ஜென்மம் அடைவான். ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் காலத்தில் தாயினுடைய மல மூத்தராதிகளால் அதிகமாகத் துன்பங்களை அடைவான். இறப்பதை விட பிறப்பதில் உள்ளதான துன்பத்தையும் கர்மாதியையும் எண்ணி ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும். தாய் வயிற்றிலிருந்து பிறந்தவன் பால்ய வயதில் உண்ட விளையாட்டுகளால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிபவரே மிகப் பலராவர். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ அவனே நிரதசிய இன்ப வீடாகிய நமது உலகையடைவான். கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து பிறந்து இறக்கிறான். பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாவத்தினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்த உடனே மறித்து மீண்டும் பிறந்து மடிகிறான். அவன் பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை.  பூர்வ ஜென்மத்தால் நல்ல நெறிப்படி வாழ்ந்து தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன் பூமியில் பிறந்து தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான்.
                                       
                                          ஒ, வைனதேயா!  கற்பந் தரித்த ஆறு மாதத்துக்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின் விழுந்த மாதம் ஒன்றாயின் ஒருநாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆராயின் ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும். பிதாவுக்கு அத்தீட்டு இல்லை. கருவழியாமல் பத்தாம்
மாதத்தில் பிறந்து மூன்று வயதுக்குள் மாண்டால் இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால்சோறும், ஊர்க்குழந்தைகளுக்குக்  கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குமேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பலருக்கு அன்னம் கொடுத்தல் வேண்டும். இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் குழந்தை இறந்தால் அந்ததந்த வர்ணதாருக்குரியபடி செய்து தீர்த்தமும் பாலும் பாயசமும் முதலிய உணவுப் பொருட்களைத் திரவ வடிவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். உலகில் பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறுபிறவிஎடுக்காமல் மீளாவுலகெய்ய முரற்சி செய்ய வேண்டும்.இவைகளை முறைப்படி செய்யாவிட்டால், ஒரு நாளில் ஒரு வேளை கூட பசியாற உன்ன வழியற்ற தரித்தரனுக்கு புத்திரனாகப் பிறந்து கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல் வருந்தி விரைவில் மடிந்து மீண்டும் பிறப்பான்.
                         
                       ஒருவன், தான் இறந்தால் மறு ஜென்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது. தீர்த்த யாத்திரை சேது புனித நதிகளில் நீராடியவர், மனத்தூயமையுடயவர், பொய் சொல்லாமல் இன்சொல் பேசுவான், சகல் சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துக்கள் இருந்தும், தானதர்மம் செய்யாதவன் மறுபிறவியில் தரித்தவனாக பிறப்பான். மனிதன் தனக்குள்ள சம்பத்துக்குத் தகுந்த படி தானதர்மஞ் செய்ய வேண்டும் என்று திருமால் கூறினார்.

Tuesday, October 19, 2010

பிரேத ஜென்மமடையக் காரணங்கள்:


ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறியதும் கருட பகவான் திருமகள் தலைவனைத் திருவடி தொழுது ஒ அனந்த கல்யாண குணநிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜென்மத்தை அடைவான், அடைந்தவன் என்ன பொருளை உண்பான்? எங்கே வசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும் என்று கேட்கவும் பரமபத நாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்:


புள்ளரசே! பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில்  கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து, அவனது குலத்தில் பிறந்த ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டவனும், மரித்தவுடன் பிரேத ஜென்மத்தை அடைவான்.
                                                                         

                                                            பிறருக்கு உரிமையான பூமியை அபகரித்தவனும், எல்லைகளை புரட்டித் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், தற்கொலை செய்து இறந்தவனும், மிருகங்களால் தாக்கியிறந்தவனும், சம்ஸ்காரம் செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இறந்தவனும், தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாமல் இறந்தவனும், விருஷோர்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவான். கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டிருக்கும் போதோ செத்தவனும், தெய்வத்திரு நாமங்களை உச்சரிக்காமல் உயிர் விட்டவனும், ரஜஸ்வாலையான பெண் சண்டாளன் முதலியோரை தீண்டிவிட்டு ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும், ரஜஸ்வாலையாய் இருக்கும் போது அவ்வீட்டில் இறந்தவனும், தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனு நூலுக்கு விரோதமாக தீர்ப்பு  வழங்குவோனும், தீர்மானம் செய்பவனும், அந்தணரையும் பசுக்களையும் கொல்பவனும் ஹிம்சிப்பவனும், கல், மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும் வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றை களவாடுவோனும், பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.
                         
  பிரேத ஜென்மம் அடைந்தோர் அனைவரும் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள் என்றார் திருமால்.

Friday, October 8, 2010

தோஷ பரிகாரமும், முதன்மையானவர்களை பூஜித்தலும்.

நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார்! ஸ்ரீ மந் நாராயனமூர்த்தியைத் தொழுது ஜெனார்தனா! பிரேத ஜென்மத்தையடைந்தவன் அந்த ஜென்மதிலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜென்மம் பிடித்திருக்கும்? இவற்றைக் கூற வேண்டும் என்று பிரார்த்தித்தான்.
அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்.

பட்சி ராஜனே! பிரேத ஜென்மத்தையடைந்தவன், தன் உறவினர்களின் கனவில் தோன்றினாலும், துன்பத்திற்கு மேல் துன்பங்கள் செய்தாலும் அதைப் பற்றி பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம், தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர் செடிகளை உண்டாக்கி நந்தவனம், அமைக்க வேண்டும். பசுக்கூட்டங்களை வயிறார மேய்வதன் பொருட்டு பசும்புல் வளரத் தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காக குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம் பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.
                       கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி முதலிய நதிகளில் நீராடித் தானதர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போது வருகின்றதோ, அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் அவசியமாக செய்ய வேண்டும். செய்யாவிட்டால் துன்பங்கள் மேலும் மேலும் விருத்தி யாகும். பிரேத ஜென்மம்த் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமலிருக்க கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும் பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்துடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான். அதனால் பிரேத ஜென்மத்தை அடைந்தவனும் இன்படைந்து பூவுலகத்தை யடைந்து அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்கும் ஒரு புத்திரன் உண்டாகிக் கொள்வான் என்றருளினார்.
                         அதற்கு கருட பகவான் திருமாலை நோக்கி, ஆராவமுதே! ஒருவனுக்கு தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜென்மமடைந்திருகிறான் என்பது தெரியவில்லை. அப்பிரேத ஜென்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க, அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தை சொல்லி செய்ய வேண்டியவை யாவை என்று கேட்கிறான். அவர்களும் பிரேத ஜென்ம தோஷத்தால் தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்கிறார்கள். அப்போது அவன் செய்ய வேண்டியவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும் என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
                           ஒ! புள்ளரசே!  இது போன்ற சமயங்களில் பெரியோர் செய்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜெபம், ஓமம், தனம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயண பலி செய்தல் வேண்டும். பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்ப்படுத்தும், புண்ணிய காலங்களில் புண்ணிய ஷேத்திரங்களில் பிதுர்க்களைக் குறித்து எவன் ஒருவன் தானதர்மனகளைச் செய்கிறானோ, அவன் பூதப் பிரேத பைசாசங்களால் தொந்திரவும், துன்பமும் அடைய மாட்டான்.
                           சரீரத்தை உண்டாகுவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும். தாய், தந்தை, குரு மூவரும் முதன்மையானவர்கள். எந்தக் காலத்திலும் அவர்களைப் பூஜிப்பது மனிதனின் கடமை. தாய், தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். புத் என்ற நரகத்திலிருந்து தாய், தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன் தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன் பெண்டு பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, புலையனிலும் புலையனாவான்.  ஒ, கருடா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும், வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்கும் குடும்பத்தில் திருமணம் முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, சேஷ்திராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து அதன் பிறகு யாவுஞ் செய்யலாம் என்று கூறியருளினார்.