Wednesday, February 16, 2011

தானச் சிறப்பும் உயிர் பிரியும் விதமும்

ஸ்ரீ மந் நாராயணர், கருடனை நோக்கி, வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது சதுர்த்தியிலாவது, பௌர்ணமியலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். பிரமால்யத்திலும், தேவாலயத்திலும் வடக்கு கிழக்கு முகத்தில் தீபம் வைக்க வேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டேறியச் செய்து கொடுக்க வேண்டும்.
         மனிதனாக பிறந்த ஒருவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன் தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். ஆசனப் பலகையையும் செப்புத் தாலியையும் பொருள்களையும் தானம் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாக எமலோகம் செல்வான். அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும் குடையும், விசிறியும், பாத ரஷயையும் அவசியமாக தானம் செய்ய வேண்டும். வெற்றிலை, பக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானம் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள். ஆடைகளைத் தானம் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறை போன்ற கடைவாய்ப் பற்களும், செம்பட்டை ரோமமும், அச்சம் தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள் என்றருளிச் செய்தார்.
                   கருடன் அவரை நோக்கி, ஸ்ரீ ஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கேட்க பகவான் கூறலானார்.
                    கருடா! உயிரானது மனிதனது சரீரத்தை விட்டு விலகும் பொது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமக்கால்கள் துவாரங்கள் வழியாகவோ, நீங்கி விடும். பாபிகளுக்கு அபானமார்க்கமாக உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டைப் போல கிடக்கும். பிறகு அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல்கூறுகள் பஞ்சபூதத்தால் ஆனவை. ஆகையால் ப்ரித்வி மண்ணிலும், அப்பு புனலிலும், தேயும் அக்கினியிலும், வாயு காற்றிலும் ஆகாயத்திலும் லயமாகி விடும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், காமேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து, ஒன்றோடொன்று உறைந்து இருப்பான். உயிரானது நீங்கும் பொது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடிஎருவதைப் போலவே புண்ணியஞ் செய்த ஜீவன், தன வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஆய்ந்தும் அமைந்த ஒரு திவ்விய தேசத்தில் அவன் குடியேறுவான். மலமூத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும் ஊனும் ஊனும் நரம்பும் எழும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும். ஒ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி, மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தினை சொல்கிறேன் கேட்பாயாக!
                       பல நரம்புகளோடு துணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக்குரோத லோப மோக மதமார் சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம குரோத இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள் என்று கூறியருளினார். 

3 comments:

  1. புராணங்கள் என்பது மனிதன் வாழ்வதற்குரிய வாழ்க்கை நெறிமுறைகளை உபதேசிப்பவை ஆகும்.
    சிலர் புராணங்களை நம்புவது கிடையாது. அவர்கள் இந்த கருடபுராணத்தை படித்தால் உண்மையை உணர்ந்து தருமங்கள் செய்து நற்கதியை அடைவார்கள் என்பது திண்ணம்.
    தன்னலமற்ற உங்கள்‍ சேவையை தொடருங்கள்.
    முடிவில் இந்த கருடபுராணம் பதிவினை நூலாக வெளியிட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. worthy articles .....

    ReplyDelete