Friday, February 25, 2011

உடலியல் பற்றிய விளக்கங்கள் 2

வைனதேயா!  பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்)

தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன.

பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.

இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.

சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.

இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும். ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊத்தி விருத்தி செய்கிறது. சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்ப்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.

அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்க்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள். திரிகொனத்தை மேருகிரியென்றும்,  கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.

                                                                              சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றி நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர். மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன். ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போதுதானே அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வவளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான். ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதர்காகவாது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன. ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால் அதையும் கேட்கலாம் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்

No comments:

Post a Comment