Tuesday, October 19, 2010

பிரேத ஜென்மமடையக் காரணங்கள்:


ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறியதும் கருட பகவான் திருமகள் தலைவனைத் திருவடி தொழுது ஒ அனந்த கல்யாண குணநிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜென்மத்தை அடைவான், அடைந்தவன் என்ன பொருளை உண்பான்? எங்கே வசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும் என்று கேட்கவும் பரமபத நாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்:


புள்ளரசே! பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில்  கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து, அவனது குலத்தில் பிறந்த ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டவனும், மரித்தவுடன் பிரேத ஜென்மத்தை அடைவான்.
                                                                         

                                                            பிறருக்கு உரிமையான பூமியை அபகரித்தவனும், எல்லைகளை புரட்டித் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், தற்கொலை செய்து இறந்தவனும், மிருகங்களால் தாக்கியிறந்தவனும், சம்ஸ்காரம் செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இறந்தவனும், தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாமல் இறந்தவனும், விருஷோர்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவான். கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டிருக்கும் போதோ செத்தவனும், தெய்வத்திரு நாமங்களை உச்சரிக்காமல் உயிர் விட்டவனும், ரஜஸ்வாலையான பெண் சண்டாளன் முதலியோரை தீண்டிவிட்டு ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும், ரஜஸ்வாலையாய் இருக்கும் போது அவ்வீட்டில் இறந்தவனும், தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனு நூலுக்கு விரோதமாக தீர்ப்பு  வழங்குவோனும், தீர்மானம் செய்பவனும், அந்தணரையும் பசுக்களையும் கொல்பவனும் ஹிம்சிப்பவனும், கல், மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும் வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றை களவாடுவோனும், பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.
                         
  பிரேத ஜென்மம் அடைந்தோர் அனைவரும் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள் என்றார் திருமால்.

No comments:

Post a Comment